மதுரை அருகே மேலூரில் கோயில் மாடு இறப்பில் மர்மம்: இருவர் கைது.

மதுரை அருகே மேலூரில் கோயில் மாடு இறப்பில் மர்மம்: இருவர் கைது.
X
மதுரை மேலூர்- கோயில் காளை சந்தேக மரணம் தொடர்பாக போலீஸார் இருவரை கைது செய்தனர்.

மேலூர் அருகே கோவில்மாடு மர்மமான முறையில் உயிரிழப்பு, இருவரை பிடித்து கீழவளவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பெரும்பாளபட்டி கிராமத்தில் உள்ள முத்தம்மாள் கோவில் ஜல்லிக்கட்டு காளை, அலங்காநல்லூர், பாலமேடு, உறங்கான்பட்டி, கண்டுபட்டி, சிராவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு பல பரிசுகளை வென்ற நிலையில், கடந்த இரு தினங்களாக இந்த கோவில் ஜல்லிக்கட்டு காளையை காணாத நிலையில், பண்ணிவீரன்பட்டியைச் சேர்ந்த வீரய்யா, மற்றும் கருப்பையா ஆகியோரது தோட்டத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து, பெரும்பாளபட்டி கிராமத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வீரய்யா மற்றும் கருப்பையா ஆகியோரை கீழவளவு காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india