மதுரை அருகே மக்கள் பாராட்டும் ஊராட்சித் தலைவர்:

மதுரை அருகே மக்கள் பாராட்டும் ஊராட்சித் தலைவர்:
X

மக்களின் சேவையில் ஊராட்சித் தலைவர்

மேலூர்- இல்லாதோர் ஏழை எளிய மக்களுக்கு தினசரி உணவுகள் வழங்கி வரும் மக்கள் பாராட்டும் ஊராட்சித் தலைவர்

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட திருவாதவூர் கிராம ஊராட்சியில், தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் இளவரசன் முயற்சியால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கொரனோ தொற்றிலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வழியுறுத்தியும், கபசுர குடிநீர், முகக்கவசம், சானிட்டைசர் வழங்குவதோடு ஊரில் உள்ள எல்லா தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது, இல்லாதோர் ஏழை எளிய மக்களுக்கு தினசரி , மதியம் உணவுகள் வழங்கி வருகிறார்.

மேலும், குடிநீர் குழாய்களில் உள்ள பைப் லைன்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை தோண்டி சரி செய்து புதிய பைப் லைன்களை பதித்து வீடு களுக்கு சுத்தமான குடிநீரூம் வழங்கி வருகிறார். அவரை மக்கள் பாராட்டுவதில் தவறேதுமில்லை என்பது கண் முன்னால் தெரிகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!