விவசாயியை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்

விவசாயியை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்
X
மேலூர் அருகே, விவசாயி மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாம்பிராணிப்பட்டியைச் சேர்ந்தவர் திருமலை, இவர் இப்பகுதியில் உள்ள முருககோன் கண்மாய், புதுகண்மாய், நாயக்கன் கண்மாய் ஆகியவற்றை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்,

இந்நிலையில், கடந்த 26ம் தேதி அப்பகுதியில் திருமலை ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத சிலபேர், திருமலையை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் உடலில் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளனர்.

இதில், படுகாயமடைந்த திருமலை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக, கொலை முயற்சி தாக்குதல் நடத்தியதாக சிலர் மீது மேலவளவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புகார் மீது மேலவளவு காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், 50க்கும் மேற்பட்டோர், அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான காவல்துறையினர், திருமலை தாக்கப்பட்ட புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்துச் சென்றனர் ...

Tags

Next Story
ai marketing future