மதுரை மேயர்- துணை மேயர் தேர்தல்களில் திமுகவில் ஜெயிக்கப் போவது யாரு?
பைல் படம்
மதுரையில் ஜெயிக்கப் போவது யாரு? திமுக கவுன்சிலர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிக சிறப்பாக நடைபெற்று, அதில் அதிக இடங்களை திமுக வெற்றி கண்டுள்ளது.
அனைத்து மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. எனவே, தற்போது மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. எப்போதும், மதுரை என்றாள் மாநகராட்சியை திமுக தான் வெற்றி பெறும் மேயர் மற்றும் துணை மேயராக திமுகவினர் தான் இருப்பார்கள் என்ற நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றது. பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சியை திமுக வென்று எடுத்துள்ளது.
இந்த நிலையில், கட்சிக்குள் வெற்றிபெற்ற வேட்பாளர்களில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு கடுமையான போட்டி இருந்து வருகிறது. மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கியதால், வெற்றி பெற்ற திமுக பெண் வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜயமவுஸ்மி, முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியின் மனைவி பாண்டிச்செல்வி மதுரை மாநகராட்சி வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் முன்னாள் கவுன்சிலர் சசிகுமாரின் மனைவி வாசுகி ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இவர்களில், யாருக்கு மேயர் பதவி என்பதில் பலப்பரிட்சை நடைபெற்று வருகிறது. அதேபோல், துணைமேயர் பதவிக்கும் கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், இறுதிகட்டத்தில் மதுரை மாநகராட்சி 84- வது வார்டில் போட்டியிட்டு மதுரையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கச் செய்தார் 4 முறை கவுன்சிலராக வெற்றி பெற்றவரும் அவனியாபுரம் நகராட்சி சேர்மனாக பதவி வகித்தவர் போஸ். இவர், மாணவர் பருவத்திலேயே கவுன்சிலராக வெற்றி பெற்று அரசியலில் முழுமையாக ஈடுபட்டவர் போஸ் முத்தையா, துணை மேயர் பதவிக்கு தகுதித்தேர்வில் கட்சிக்குள் முன்னணியில் இருக்கிறார்.
அதேபோல் ,மதுரை மாநகர் இளைஞர் அணி முன்னாள் செயலாளர் பல்வேறு காலகட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்தவர் என்ற பெருமைக்கு உரியவராக இருக்கும் ஜெயராமன் .
துணை மேயர் பதவிக்கு தகுதி சுற்றில் இறுதியாக இருக்கிறார் என்று திமுக உயர்மட்ட நிர்வாகிகள் இடையே பேச்சு அடிபடுகிறது. எனவே, இன்னும் இரண்டு நாட்களில் மேயர் மற்றும் துணை மேயர் பதவியை ஜெயிக்கப் போவது யார்? என்பது தெரிந்துவிடும் என்று மதுரையில் பரவலாக திமுகவினரிடம் பேச்சு பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu