செயற்கை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் கள்ளழகர்

செயற்கை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் கள்ளழகர்
X
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, செயற்கை தேனூர் மண்டபத்தில், மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.

மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வாக இன்று, கோவில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள செயற்கை வடிவிலான தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.

செயற்கை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய நிகழ்வை போன்றே, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் வகையில் தேனூர் மண்டபம் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது .
இந்த விழா, பக்தர்கள் யாருமின்றி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், கோவில் இணையதளம் வாயிலாக, இந்த விழாவை பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!