மதுரை நகரில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த மழை வெள்ளம்

மதுரை நகரில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த மழை வெள்ளம்
X

மதுரை நகரை குளிர்வித்த பலத்த மழை.

மதுரை நகரில் பெய்த மழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பகல் நேரங்களில், கடுமையான வெப்பம் நிலவியது. இரவு நேரங்களில், மதுரை நகர் பகுதிகளில் காற்று வெப்பத்தை வெளிப்படுத்தியது. இதை தணிக்கும் வகையில், இன்று மாலை பொழுதில், திடீரென குளிர்ந்த காற்றுடன், மதுரை நகரில் மழை பெய்தது.

மதுரையில் பசுமலை, பழங்காநத்தம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணாநகர், புதூர், கருப்பாயூரணி, வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்தது. அதேபோல் மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் வார்டு எண் 30..கழிவுநீர் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்தது. மருதுபாண்டியர் தெருவில், ரைஸ்மில் அருகே, மழைநீர் குளம்போல தேங்கியது. திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்ததால், மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags

Next Story