மதுரை மாவட்டத்தில் அக். 10-இல் மெகா தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர்
பைல் படம்
மதுரை மாவட்டத்தில் 5-ஆம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் அக். 10-ம் தேதி: நடைபெறவுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 5-ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி மெகா தடுப்பூசி முகாம் வருகின்ற ஞாயிற்றுகிழமையன்று முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், 1 இலட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் 18 வயதினைத் கடந்தவர்களின் மக்கள் தொகை 24 இலட்சத்து 45 ஆயிரமாக உள்ளது. இதில், கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 14 இலட்சத்து 55 ஆயிரத்து 294 மக்கள் அதாவது 60 சதவீதம் நபர்கள் செலுத்தியுள்ளார்கள். மேலும், கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையை 3 இலட்சத்து 68 ஆயிரத்து 292 மக்கள் அதாவது, 15 சதவீதம் நபர்கள் செலுத்தியுள்ளார்கள்.
புறநகரப் பகுதிகளில், கொரோனா மெகா தடுப்பூசி முகாம் மூலம் 63 சதவீதம் மக்களும், மாநகரப்பகுதிகளில் 55.74 சதவீதம் மக்களும் பயனடைந்துள்ளார்கள். கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக்கொண்டவர்களில் ,இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளும் காலம் முடிந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 34 நபர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு, குறுந்தகவல் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரண்டாம் தவணையை செலுத்திக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். கொரோனா மெகா தடுப்பூசி முகாமிற்காக 1 இலட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.
மாநகரப்பகுதிகளில் 500 இடங்களிலும், புறநகரப்பகுதிகளில் 900 இடங்களிலும், கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் மற்றும் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த முகாமில் 17 ஆயிரத்து 803 மாற்றுத்திறனாளில்10 ஆயிரத்து 198 நபர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையை செலுத்திக்கொண்டுள்ளனர். மீதமுள்ள நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், வீடற்றவர்கள் சாலையோரங்களில் தங்கியுள்ளவர்கள் மற்றும் தங்கும் விடுதியில் இருப்பவர்களையும் மொபைல் முகாம் மூலம் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. மதுரை மாவட்டத்தில் 4 கொரோனா மெகா தடுப்பூசி முகாமினையும், சிறப்பாக நடத்த முடிந்தது.
இந்த 4 கொரோனா மெகா தடுப்பூசி முகாமில், மட்டும் 3 இலட்சத்து 64 ஆயிரத்து 788 மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். ஆனால், கடந்த 4-வது முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு மக்கள் சிலர் முன்வரவில்லை. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கொடுத்த தவகலின்படி, கொரோனா முதல் தவணை செலுத்திக்கொண்டவர்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் 24 நபர்களுக்கான சேர்கையும் செப்டம்பர் மாதத்தில் 235 நபர்களுக்கான சேர்கையும் உள்ளன.
இதில் ,கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 4 நபர்கள் மட்டுமே ஐ.சி.யு சேர்க்கைக்கு சென்றுள்ளனர். அவர்களில், 3 நபர்களை மட்டுமே ஐ.சி.யு சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள் யாரும் ஐ.சி.யு சேர்க்கைக்கு செல்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. மேலும், கொரோனா முதல் தவணை செலுத்திக்கொண்டவர்களில், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எவரும் இறக்கவில்லை என்றார்.
கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். இவற்றில், அதிகமான மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கே ஆர்வமாக உள்ளனர. கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்வதற்கு 84 நாட்கள் இடைவெளியும் மற்றும் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாம் தவணை செலுத்திக்கொள்வதற்கு 30 நாட்கள் இடைவெளியும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா மெகா தடுப்பூசி முகாமில், கலந்து கொள்ளும் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 1 இலட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும் மற்றும் 10 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசியும் இருப்பில் உள்ளது..
மதுரை மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா பெருந்தொற்றினால் ஒரு நாளைக்கு 20 முதல் 30 நபர்கள் பாதிக்கப்படு கின்றனர். இந்த எண்ணிக்கையாக கூடும் பட்சத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோரோனா மூன்றாவது அலை வந்தாலும், அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தமிழ்நாடு அரசு விதித்துள்ள முகக்கவசம் அணிதல் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும் பொது இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் வேண்டும்.
ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வாக்குசாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திருமங்கலம் பஞ்சாயத்தில் 97 வார்டுகளில் 11 வார்டுகளில் மட்டும் மைக்ரோ அப்சர்வர் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu