திருமங்கலத்தில் வீட்டை உடைத்து நகை திருட்டு

திருமங்கலத்தில் வீட்டை உடைத்து நகை திருட்டு
X

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்

திருமங்கலத்தில் வீட்டை உடைத்து 51 பவுன் நகை திருட்டு

மதுரை ,திருமங்கலம் எம் ஜெயன்ட் விலாஸ் பகுதியில் சேர்ந்தவர் வேலாயுதம் 54. இவரது மகன் சென்னையில் படித்து வருகிறார். இதற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில், அவர்களுடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் குடும்பத்துடன் திரும்பி வந்து பார்த்தார்.அப்போது, வீட்டில் முன். கதவு உடைக்கப்பட்டு இருந்தது வீட்டில் பெட்ரூமில் லாக்கரில் வைத்திருந்த 51 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து, வேலாயுதம் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

பைபாஸ் சாலையில் கஞ்சாவுடன் கணவன் மனைவி கைது:2 கிலோ கஞ்சா ரூ31 ஆயிரம் பறிமுதல்:

மதுரை ,பைபாஸ் சாலை பகுதியில், கரிமேடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது ,அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஆட்டோவை சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில், புதுஜெயில் ரோடு கைச் சேர்ந்த மாறன் 54. என்பவரும் அவருடைய ,மனைவி நீலாவதியுடன் 42 இருந்தார்.

போலீசார், ஆட்டோவில் இருந்த கட்டப்பையை சோதனை செய்தபோது, அதில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது. இது குறித்து அவர்கள் இருவரிடமும் விசாரித்த போது தனது வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகவும், அவர்களுக்காக காத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் விற்பனை செய்த பணம் 31,ஆயிரம், இரண்டு கிலோ கஞ்சாவையும் கஞ்சா வைத்திருந்த ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து உயிரிழப்பு

மதுரை திருப்பரங்குன்றம் சாமியபிள்ளை தெரு வேலுச்சாமி நாடார் சந்தை சேர்ந்தவர் முத்துராக்கு 56. இவர் , மருமகன் பைக்கை ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்து சென்றார்.அவர்கள் கனரா பேங்க் ஏடிஎம் அருகே சென்றபோது, திடீரென்று முத்ராக்கிற்கு தலை சுற்றியது. அவர் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில்,அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் .இந்த விபத்து குறித்து, முத்ராக்கின் கணவர் மாயகிருஷ்ணன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த விபத்துக்கான காரணம் என்ன முத்ராக்குவின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்மாய்க்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை அருகேகே புதூர் எஸ் ஆர் எம் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஜோதி கணேசன் மகன் கார்த்தி முனியசாமி 13. இவர், கே.புதூர் ஆர்.சி.பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இவரது பெற்றோர்கள் பூ வியாபாரம் செய்து வருகின்றனர் .இந்த நிலையில் , அவர்கள் வழக்கம் போல் பூ வியாபாரத்திற்கு சென்றுவிட்டனர். கார்த்தி முனியசாமியும் , அவருடைய நண்பர்களும் பரசுராம்பட்டி கண்மாய்க்கு குளிக்கச்சென்றனர். அப்போது குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியானான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவனுடைய தந்தை ஜோதிகிருஷ்ணன் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர்கள் சிறுவனின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனையூர் கண்மாய்க்குள் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை ,ஆனையூர் செந்தூர் நகரை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் 50. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால், கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டுக்கு வருவதில்லை. குடித்துவிட்டு ஆங்காங்கே விழுந்து கிடந்துவந்தார். இந்த நிலையில், கருப்பசாமி கோவில் அருகே சிமை கருவேல மரத்தில் பிளாஸ்டிக் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த அவருடைய மனைவி கிருஷ்ணவேணி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப்

பதிவு செய்து, உயிரிழந்த செந்தாமரை கண்ணனின் உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசூலுக்குச் சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

மதுரை மாவட்டம், மேலூர் கஸ்தூரிபாய் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வீரணன் மகன் அருண் பாண்டியன் 32. இவர், தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய நிறுவனத்தில் ஆத்திகுளத்தை சேர்ந்த சுசீலா என்பவர் கடன் வாங்கியுள்ளார் .

இதற்கான இ.எம்.ஐ.தொகையை வசூல் செய்வதற்காக அருண் பாண்டியன் சென்றுள்ளார். அதற்கு அவர்கள் பணத்தை திருப்பி செலுத்தாமல் அவரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. சுசீலாவும் அவரது மகன் மாரிமுத்து மருமகள் விஜயலட்சுமி ஆகிய மூவரும் அவரை ஆகாசமாக பேசி இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து, அருண்பாண்டியன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.‌ போலீசார் தாய் மகன் மருமகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து மகன் மாரிமுத்துவை கைது செய்தனர்.

மதுரை அருகே வீடு புகுந்து நகை திருட்டு:

மதுரை அருகே காதக்கிணறு கிளாசிக்கார்டன் 3-வது தெருவேச்சேர்ந்தவர் சாந்த கிருஷ்ணன் மகன் விஜய் கிருஷ்ணன் 30. இவர் ,குடும்பத்துடன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் 6 பவுனும் ,பேன் கார்டு ,கார் ஆர்.சி. புக் முதலியவைகள் திருடப்பட்டிருந்தன. இந்த சம்பவம் குறித்து, விஜய் கிருஷ்ணன் அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story