நின்று கொண்டிருந்த வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

நின்று கொண்டிருந்த வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
X
மேலூர் அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது டுவீலர் மோதி இளைஞர் பலி:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே நின்றுக்கொண்டிருந்த வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உ.புதுப்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் முனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, கட்டாணிப்பட்டி அருகே வைக்கோல் ஏற்றி நின்றுக்கொண்டிருந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியதால், முனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, முனிச்சாமியின் தாய் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில், கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பியோடிய வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project