மதுரை அருகே ஆடு மேய்த்த மூதாட்டி கொலை: இளைஞர் கைது

மதுரை அருகே ஆடு மேய்த்த மூதாட்டி கொலை: இளைஞர் கைது
X
மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது.

மதுரை ஒத்தக்கடையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை, பலவந்தமாக பாலியல் கொடுமை படுத்தி, கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் மூதாட்டி பொட்டை 78. இவர் ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார் .இவர் வவ்வால் தோட்டம் முனியாண்டி கோவில் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது ,25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரை பலவந்தம்செய்து, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் ,அவரை கல்லால் தலையில் தாக்கி படுகொலை செய்துவிட்டு ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் ஒத்தக்கடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட மூதாட்டி பொட்டையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து, கொலையாளியை தேடிவந்தனர். விசாரணைக்குப்பின், அவரை கொலை செய்தது யார் என்று அடையாளம் தெரிந்தது.பின்னர், அவரை கொலை செய்த தேனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பிரபு 25. என்ற வாலிபரை கைது செய்தனர்.

மது குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் இளைஞரிடம் வழிப்பறி: வாலிபர் கைது:

மதுரை ஆணையூர் வீட்டு வசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மாணிக்க ஜெபராஜ் 36. இவர், ஆணையூர் பகுதியில் சென்ற போது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்தார்.

அவர் மது அருந்த பணம் கேட்டு அவரை மிரட்டினார்.அவரது பையில் இருந்து ரூபாய் முன்னூரை வழிப்பறி செய்துவிட்டார்.இந்த சம்பவம் குறித்து, மாணிக்க ஜெபராஜ் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் பணம் பறித்த ஆனையூர் முத்துமாரியம்மன் கோவில் தெரு முத்து நகரை சேர்ந்த சிக்கந்தர் மகன் சேக் முகமது 21. என்ற வாலிபரை கைது செய்தனர்.

மதுரையில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது:

மதுரைமேலப்பொன்னகரம்,கோமஸ்பாளையம் இரண்டாவது தெருவைச்சேர்ந்தவர் கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் 20.இவர் மீது, கொலைமுயற்சி ,பிறருக்கு காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்ற வழக்குகள் உள்ளன.இவரால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுவந்தது.இதனால், அவரது குற்றச்செயலை கட்டுப்படுத்த அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.அவரது உத்தரவைத்தொடர்ந்து, கார்த்திக் என்ற கொம்பனை போலீசார் குண்டர்சட்டத்தில் கைது செய்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!