வீரபாண்டி கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு

வீரபாண்டி கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு
X

வீரபாண்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.

வீரபாண்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை, அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு நலத்திட்டங்களை ஒவ்வொரு துறையின் வாயிலாக தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக அர்பணித்து கொண்டிருக்கிறார்கள். மதுரை மாவட்டம், மேற்கு ஒன்றிய வீரபாண்டிய ஊராட்சியில், இன்றைய தினம் கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஆரம்பப்பள்ளிகளில் கல்வி பயிலக்கூடிய மாணவச் செல்வங்களுக்காக "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை துவக்கி வைத்திருக்கின்றோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் நாளது தேதி வரை சிறப்பான திட்டங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டமாக அறிவித்து வருகின்றார்கள். சாலை விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படாமல் காக்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர், வேலம்மாள் மகளிர் கல்லூரியில் நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தினை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க இருக்கின்றார்கள். அதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் 20 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளன. தமிழக அரசின் சார்பில் உலகளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கின்றது.

இந்த ஆண்டு நடைபெறக்கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நாட்டு காளை மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்மென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளை பின்பற்றி இதுவரை இல்லாத அளவிற்கு முன்னேற்பாட்டுடன் செவ்வனே நடத்தப்படும். இன்றைய தினம் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவர்களிடம் நாட்டு மாடுகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாட்டு பசுவின் பால் பேருதவியாக இருக்கின்றது.

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் நோய்தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றனர். ஓமிக்ரான் வைரஸ் நோய்தொற்று பரவாமல் இருப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிப்பதற்கும் அவர்களுடைய மாதிரிகளை எடுத்து பரிசோதிப்பதற்கும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றார். தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் நோய்தொற்று பரவலை தடுப்பதற்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன என என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையினையும்இ சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் 2 சுத்திகரிப்பு நிலையத்தினையும் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான பயிற்சி மையத்தினையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நடராஜ்குமார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story