மதுரை பழமுதிர்சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

மதுரை மாவட்டம், அழகர் கோயில் முருகன் கோயிலில் இன்று தொடங்கிய சஷ்டி விழா
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர்கோயில் மலை மீது, முருகனின் ஆறாவது படைவீடாக கருதக்கூடிய பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு கந்த சஷ்டி விழா நேற்று மாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில், சோலைமலை மண்டபத்தில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய உற்சவர்களுக்கு பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்று கந்த சஷ்டி விழாவிற்கான காப்பு கட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் 9ஆம் தேதி மாலை திருக்கோயில் முன்பு நடைபெறும் எனவும், அதனைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி காலை திருக்கல்யாண வைபவமும் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட வைபோகங்களில், கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu