மதுரை அருகே சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி : அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை அருகே சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி :  அமைச்சர்கள் பங்கேற்பு
X

மதுரை எம்.சாத்திரப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, எம்.சத்திரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1200 காளைகள் பங்கேற்றன. சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக, எம்.சத்திரப்பட்டி கிராமத்தில், மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1200 காளைகள் பங்கேற்றன. மொத்தம் 10 சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 720 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. அதேபோல, சுற்றுகளில் சிறப்பாக விளையாடி காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி, சைக்கிள் போன்ற எண்ணற்ற சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டி முடிவில், சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட 21 காளைகளை பிடித்த திருமாஞ்சோலை அஜய்குமார், முதல் பரிசாக கார் பெற்றார். 19 காளைகளை பிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் இரா.விஜய் , இரண்டாம் பரிசாக புல்லட் பெற்றார். 18 காளைகளை பிடித்த கருப்பாயூரணி ரா.கார்த்திகேயன், மூன்றாம் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

அதேபோல சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் சத்திரப்பட்டி தங்கபாண்டி விஜயா, முதல் பரிசாக கார், ஆண்டார்கொட்டாரம் உதயா - காமேஷ்க்கு , இரண்டாம் பரிசாக புல்லட், யோககுரு ரூ கோ உதயா , மூன்றாம் பரிசாக பைக் வழங்கப்பட்டது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பரிசுகளை வழங்கினார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி , பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ் எஸ். சிவசங்கர் , சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்நகுமார் திருவாரூர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!