பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா திட்டம் அறிமுகம் : இயக்குநர் தகவல்

பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா திட்டம் அறிமுகம் : இயக்குநர் தகவல்
X

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

ஒரு நாள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா 17.07.2022- ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா அறிமுகம் செய்யப்பப்படும் சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் தகவல்.

இது குறித்து சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் .சந்தீப் நந்தூரி மேலும் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், வழிக்காட்டுதலின்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில், சென்னை மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை ஒரு நாள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா 17.07.2022-அன்று முதல் அறிமுகப்ப டுத்தியுள்ளது.

மதுரை ஓட்டல் தமிழ்நாடு அழகர்கோயில் சாலையிலிருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் மதுரை-அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வண்டியூர் – அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் மடப்புரம் – அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் விட்டனேரி – அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் தாயமங்கலம் – அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோயில் அழகர் கோயில் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு அனைத்து கோயில்களிலும் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணத் தொகை ரூ.900ஆகும். எனவே, சுற்றுலா பயணிகள் ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலாவிற்கான என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு 91769 95841 044 – 25333333 044 – 25333444 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்