மதுரை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி: மேயர் தொடக்கம்
ஹார்விப்பட்டி பகுதிகள் ஆகிய பகுதிகளில் "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" தீவிர தூய்மைப் பணியினை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சி "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" மூலம் தீவிர தூய்மைப்பணியை மேயர் தொடக்கி லைத்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.60 எல்லீஸ் நகர் பகுதிகள் மற்றும் மண்டலம் 5 வார்டு எண்.96 ஹார்விப்பட்டி பகுதிகள் ஆகிய பகுதிகளில் "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" தீவிர தூய்மைப் பணியினை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், அறிவித்தப்படி "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" கடந்த 03.06.2022 மற்றும் 11.06.2022 ஆகிய நாட்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மண்டலம் 3 வார்டு எண்.60 எல்லீஸ் நகர் பகுதிகள், மண்டலம் 5 வார்டு எண்.96 ஹார்விப்பட்டி பகுதிகள் ஆகிய பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள், தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பேரணிகளை மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் ,எல்லீஸ்நகர் பகுதிகள் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துணிப்பைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.மேலும், பசுமையை வலியுறுத்தி எல்லீஸ் நகர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மண்டலம் 5 ஹார்விப்பட்டி பூங்காவில் தூய்மை குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை சிறப்பான முறையில் கூறிய பள்ளி மாணவிக்கு சால்வை அணிவித்து மேயர் வாழ்த்தினார். இந்த விழிப்புணர்வு பேரணியில், சுமார் 150 மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளியை சார்ந்த சுமார் 120 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த, தீவிர தூய்மைப் பணியில் வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், பொதுகழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகளை சுத்தம் செய்தல், தெருக்கள் மற்றும் பூங்காங்களை சுத்தப்படுத்துதல், முக்கிய சாலை சந்திப்புகளில் தூய்மைப்படுத்துதல், சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், நெகிழிக்கான மாற்று பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்குதல், பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடுதல், தூய்மை குறித்து உறுதிமொழி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் பாண்டிச் செல்வி, சுவிதா, நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர்கள் மனோகரன், தட்சிணாமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், சுகாதார அலுவலர்கள் வீரன், விஜய குமார், உதவிப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu