மதுரை அழகர்கோவிலில் லட்டு வழங்கும் திட்டம்; நாளை முதல் துவக்கம்

மதுரை அழகர்கோவில் (கோப்பு படம்)
மதுரை அழகர்கோவிலில் பக்தர்களுக்கு லட்டு வழங்கும் திட்டம்:
மதுரை அழகர்கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் தரப்படுகிறது. அமைச்சர் சேகர்பாபு காணொளி மூலம் நாளை இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் இலவகமாக பிரசாதம் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், பக்தர்களுக்கு லட்டு வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு, தினசரி பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் இரண்டாவது கோயிலாக, அழகர்கோவிலில், பக்தர்களுக்கு லட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை , கோயில் தக்கார் வெங்கடாச்சலம், துணை ஆணையாளர் மு. ராமசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில், கோயில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு, சில கோயில்களில் மதியம், இரவு கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுப்படு த்தப்பட்டது. சில கோயில்களில், பக்தர்களுக்கு லட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தொடங்கப்பட்டது.
தற்போது, மதுரை அழகர்கோவிலில், லட்டு வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் சென்னையிலிருந்து தொடங்கி வைக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu