மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: சாலைகளில் புரண்டோடிய மழை நீர்

மதுரை மாவட்டத்தில்  பலத்த மழை: சாலைகளில் புரண்டோடிய மழை நீர்
X

மதுரை நகரில் குளிர்ந்த காற்றுடன் பெய்த பலத்த மழை:

மதுரையில் இன்று இடியுடன் கனமழை: சாலைகளில் மழைீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மதுரையில் இன்று இடியுடன் கனமழை: சாலைகளில் மழைீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூரின் மலைப்பாங்கான பகுதிகள், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் இடி - மின்னலுடன் கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.மாட்டுத்தாவணி, அண்ணாநகர் வண்டியூர் சிம்மக்கல், காமராஜர் சாலை, பெரியார் பேருந்து நிலையம், புதூர், திருப்பாலை, பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், பசுமலை, அண்ணாநகர், மேலமடை, கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் இடி -மின்னலுடன் கன மழை பெய்தது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்க வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.இதேபோன்று ,புறநகர் பகுதிகளான சிலைமான், கருப்பாயூரணி, சக்கிமங்கலம்,அழகர்கோவில், சத்திரப்பட்டி, அவனியாபுரம் , விமான நிலையம் திருநகர், உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Tags

Next Story
future ai robot technology