மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு உதவி

மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு உதவி
X
மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு உதவி அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் தொடர் மழை சாலையோர வியாபாரிகள் கடும் அவதி

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மதுரை மாநகர், பரவை ,விளாங்குடி, சமையநல்லூர், தேனூர், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், அழகர் கோவில், காஞ்சரம் பேட்டை, திருமங்கலம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, கப்பலூர், கருப்பாயூரணி, சக்கிமங்கலம் வரிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ,தினசரி மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

மதுரை நகரில் தீபாவளி ஒட்டி கீழவாசல், முனிச்சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வியாபாரிகள் ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் .

தினசரி மாலை பெய்து வரும் மழையால், வியாபாரிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், மதுரை நகரில் பள்ளங்கள் தோண்டப்பட்டிருப்பதால், இரவு நேரங்களில் தெருக்களில் செல்ல பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் விரைவில் சாலைகளை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் உள்வட்டம், கீரனூர் கிராமத்தை சேர்ந்த செல்வா மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் மேலபூவந்தி கிராமத்தை சேர்ந்த அக்னீஸ்வரன், (3-11-2023) அன்று மதுரை மாவட்டம் கீரனூர் கிராம மயானத்தில் இடி.மின்னல் தாக்கி உயிரிழந்தார்கள். முதலமைச்சர், நிவாரண உதவி தொகைக்கான தலா 4 லட்சத்திற்கான காசோலையை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா உடன் உள்ளார்.

Tags

Next Story
Will AI Replace Web Developers