மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழை; மக்கள் மகிழ்ச்சி

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழை; மக்கள் மகிழ்ச்சி
X

மதுரை மாநகர் பகுதியில் பெய்த மழை.

மதுரையின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகினர்.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி , திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில், மதுரை நகர் பகுதிகளான பழங்காநத்தம், பெரியார் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. அண்ணாநகர், கோமதிபுரம், மேலமடை, கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்பநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!