/* */

மத்திய, மாநில அரசுகளை கேட்காமல் ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவெடுக்க முடியாது

ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவை மாநில அரசுகள் கட்டாயம் கடைபிடிக்க தேவையில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மத்திய, மாநில அரசுகளை கேட்காமல் ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவெடுக்க முடியாது
X

நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல்தியாகராஜன்

உச்சநீதிமன்றத்தில் நேற்றும், இன்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மாநில உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரமில்லை.

மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் வரி விதிப்பு தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பு வந்துள்ளது, ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவை மாநில அரசுகள் கட்டாயம் கடைபிடிக்க தேவையில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது, பேரறிவாளன் தீர்ப்பில் ஆளுநர் உட்பட அனைவரின் பணிகள் என்ன என்பது மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஜி. எஸ். டி .கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும், அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது.மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க, ஜி. எஸ். டி. கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது,

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜி எஸ் டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்தன.இந்த நிலையில், அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கவை,

ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்பான தீர்ப்பு சட்டமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக் காட்டி உள்ளது, இதில் புதிய அம்சம் எதுவும் இல்லை, மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டுவது தான் கவனிக்க வேண்டியது,உச்ச நீதிமன்றத்தில் பண மதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல வழக்குகள் இதுவரை பதில் இல்லாமல் நிலுவையில் உள்ளது. வரலாற்றில் இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜி .எஸ். டி.கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன் வைத்து உள்ளோம்.

மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையிலான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஜனநாகயத்திற்கும், மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளன.கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது.ஜி. எஸ். டி. கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழையாக உள்ளது.ஜி. எஸ். டி. கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல், அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜி .எஸ். டி .கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழையாக உள்ளது.பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துகள் தவறாக திரித்து பரப்பப்பட்டது. திட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன் என கூறினார்.

Updated On: 20 May 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!