நாட்டுப்புற கலைஞர்களின் குறைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: வாகை சந்திரசேகர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தலைவர் வாகைசந்திரசேகர்
நாட்டுப்புற நலவாரிய கலைஞர்களின் குறைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார் அந்த நலவாரியத்தின் தலைவர் வாகைசந்திரசேகர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தலைவர் வாகை சந்திரசேகர் பேசுகையில், தமிழ்நாட்டில் நல வாரியங்கள் அமல்படுத்தப்பட்டது திமுக ஆட்சியில் தான். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற கலைஞர்களின் இன்னல்களை துடைக்க அரும் பாடுபட்டு வருகிறார். நாட்டுப்புற கலைஞர் வளர்ச்சி பெற அவர்களுக்கு என்ன தேவையோ, அதை தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வேன் .நாட்டுப்புற கலைஞர்கள் வளர்ச்சிக்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபடும் என அவர் தெரிவித்தார் .
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், பாலமேடு முன்னாள் பேரூராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் நல வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu