மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X

மதுரை மீனாட்சி மருத்துவமனை செவிலிய கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Graduation Ceremony- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Graduation Ceremony- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமாக செவிலியப் பணிக்கான கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் நான்கு ஆண்டுகால பி.எஸ்.சி. நர்சிங் (செவிலியப் பணி) கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்ற 28 மாணவர்களுக்கு பட்டமளிப்புவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்களுள் முதன்மையான மூன்று மாணவர்கள், ரூ.1,75,000/- ரொக்கப் பரிசுகளோடு சேர்த்து கல்வியில் சிறப்பான செயல்பாட்டிற்காக சின்னம்மாள் கல்விச்செல்வம் விருதையும் பெற்றனர்.

காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குனர் – தலைமையகம்,எம். ரவி இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். மேலும், பட்டமளிப்பு விழா சிறப்புரையை அவர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மதுரை, மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் மற்றும் காமினி குருசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இவ்விழா நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்கள் நிகழ்த்திய பல் கலை நிகழ்ச்சிகள் அவர்களது திறன்களை நேர்த்தியாக வெளிப்படுத்தியதோடு, பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றது.

இந்நிகழ்வின்போது, டாக்டர். குருசங்கர் பேசுகையில், "உயர் திறனும், தொழில்முறை நேர்த்தியும், பொறுப்புறுதியும், கனிவும் கொண்ட செவிலியர்களை எமது கல்லூரி உருவாக்கியிருப்பது எனக்கு அதிக திருப்தியையும், மனநிறைவையம் தருகிறது. செவிலியருக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவ பண்புகள் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் ஆகியவற்றில் உயர் நேர்த்தி நிலையை எட்டுவது மீது எமது கல்லூரி உறுதியான பொறுப்புறுதியையும், அர்ப்பணிப்பையும் கொண்டிருக்கிறது. சிறப்பான இந்த பணியின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கும் எமது மாணவர்களுக்கும் மற்றும் செவிலியருக்கான கல்வி, பணி மற்றும் ஆராய்ச்சியில் தொழில்முறை சார்ந்த சுயாதீனத்தை நிலைநாட்டவும் எமது மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு விரிவான கண்ணோட்டத்திலிருந்து சுகாதார பராமரிப்பு சேவையை அணுகுகின்ற திறனையும், மனப்பான்மையையும் கொண்டவர்களாக மாணவர்களை தயார் செய்வதை கல்லூரியில் நடத்தப்படும் விரிவான நடைமுறை பயிற்சி அமர்வுகள் நோக்கமாக கொண்டிருக்கின்றன. அவர்கள் ஆற்றுகின்ற பணியில் தகுதிவாய்ந்த திறனையும் மற்றும் செவிலியர் பணியில் புரிந்துணர்வும், அக்கறையும், கனிவும் கொண்டவர்களாக அவர்களை உருவாக்குவது எமது கல்வித் திட்டத்தின் குறிக்கோளாகும். நான்கு ஆண்டுகள் கல்வித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய மனமார நான் வாழ்த்துகிறேன்," என்று கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!