உண்டியல் பணத்தை வயநாட்டுக்கு வழங்கிய சிறுமி..!ஆட்சியர் பாராட்டு..!

உண்டியல் பணத்தை வயநாட்டுக்கு வழங்கிய சிறுமி..!ஆட்சியர் பாராட்டு..!
X

சிறுமியை பாராட்டிய மதுரை ஆட்சியர்.

தீபாவளி பண்டிகைக்கு ஆடைகள் எடுக்க சேமித்துவைத்திருந்த பணத்தை வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக கொடுத்த சிறுமியை ஆட்சியர் பாராட்டினார்.

மதுரையில், சிறுமிக்கு,ஆட்சியர் பாராட்டு:

மதுரை:

தீபாவளி பண்டிகைக்கு சேர்த்து வைத்த பணத்தை வயநாடு மக்களுக்கு வழங்கிய 8 வயது சிறுமிக்கு சுதந்திர தினத்தன்று ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மதுரை திருநகரை சேர்ந்த முத்துப்பாண்டி கார்த்திகா தம்பதியினரின் 8 வயது மகள் ஸ்ரீஜோதிகா கடந்த ஐந்தாம் தேதி அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரின் நேரில் சந்தித்து தீபாவளி பண்டிகைக்காக ,தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிர் இழந்தவர்கள் மேலும்,இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கூறி ,தனது உண்டியல் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

அன்றைய தினமே சிறுமிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகஸ்ட் 15ஆம் தேதி காவலர் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டபின்னர் திறமையானவர்களை பாராட்டும் சான்றிதழும் வழங்கும் நிகழ்வில்,சிறுமி ஸ்ரீஜோதிகாவை அழைத்து, மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்