மதுரை அருகே மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்: போலீஸார் ஏற்பாடு

மதுரை அருகே மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்: போலீஸார் ஏற்பாடு
X

மதுரை அருகே  மாடு கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்:

இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.

மதுரையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளிள் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். இவர்கள் மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு செல்லும்போது, இரவு நேரங்களில் அவை சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து காவல்துறையினர் ஒட்டி வருகின்றனர். அதன்படி, மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்குமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருக்கும் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில், உதவி ஆய்வாளர் கணேசன், காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture