குடி போதை: நடுரோட்டில் அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஆசாமி..!

குடி போதை: நடுரோட்டில் அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஆசாமி..!
X

மதுரையில் சென்டர் மீடியனில் மது போதையில் படுத்த ஆசாமி.

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ காட்சிகள், குடி போதை அட்டகாசத்தால் மதுரைக்கு வந்த சோதனை.

மதுரையில் வாகன போக்குவரத்து பரபரப்பாக இயங்கும் பிரதான சாலையான மேல வெளி வீதியில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்லும் முக்கிய சாலையின் மையப்பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் மது போதையில் இருந்த ஆசாமி, கை கால்களை நீட்டி சாவகாசமாக படுத்து உறங்கி உள்ளார்.

இரண்டு புறச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே உயிருக்கு ஆபத்தான வகையிலும், தூக்கத்தில் புரண்டு சாலையில் விழும் நிலையில் இருந்த நபர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அங்கையே செத்தது போல் படுத்து கிடந்தார். இந்த நபரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரை திலகர் திடல் போலீசார் பாதுகாப்பு கருதி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். கண் முழித்த அந்த நபர் போலீசாரை ஆபாசமாக திட்டியுள்ளார்.

போலீசார் அவரை சமாதானப்படுத்தி சாலையை விடுத்து அவரிடம் பேச்சு கொடுத்தவாறு வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அதேபகுதியில் மற்றொரு போதை ஆசாமி ஒருவர் உச்சகட்ட மதுபோதையில் தள்ளாடியபடியே வந்தார், அந்த நபர் திடீரென சாலையில் நின்று அரபி குத்து பாடல் பாடியவாறு நடனங்கள் ஆடினார். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!