அழகர்கோவில் கருப்பணசாமிக்கு முன்னாள் அமைச்சர் அரிவாள் காணிக்கை

அழகர்கோவில் கருப்பணசாமிக்கு முன்னாள் அமைச்சர் அரிவாள் காணிக்கை
X

பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு அரிவாள் காணிக்கை அளித்த எஸ்பி வேலுமணி

அழகர் கோவில் 18-ம் படி கருப்பணசாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி அரிவாள் காணிக்கையாக வழங்கினார்.

மதுரை அருகே அழகர் கோவில் 18-ம் படி கருப்பசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு நேர்த்திக்கடனாக அரிவாள்கள் அளிப்பது காலம் காலமாக நடைபெற்றுவரும் சடங்காகும்.

முன்னாள் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி, இன்று 18-ம் படி கருப்பசாமி கோவிலுக்கு அரிவாள் காணிக்கையாக, வழங்கினார். உடன், முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான், ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ் .பி .வேலுமணி பதினெட்டாம் படி கருப்பணசாமிக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்தியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!