இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், காலாவதியான ஊசி மருந்து வழங்கப்பட்டதா?
அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுத்தும் காலாவதியான இன்சுலினா? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தத்தனேரி யில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் காளமேகம். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரை எடுத்து வந்துள்ளார். எனினும், சர்க்கரை அளவு குறையவில்லை இந்தநிலையில், கடந்த மாதம் மதுரை தத்தநேரியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை செய்த ஆவணங்களுடன் சென்றுள்ளார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாதம் மாத்திரை மாற்றித் தருகிறேன். என்று பரிசோதித்துப் பாருங்கள் மாற்றம் ஏதுமில்லை என்றால், அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிப்பதாக என்று சொல்லி அனுப்பி வைத்தனர். எனினும், சர்க்கரை அளவு அவருக்கு தொடர்ந்து அதே நிலையில் இருந்து வந்தது. மீண்டும் பரிசோதனை செய்து இன்று 25/02/2022 காலையில் மருத்துவரை சந்தித்தார். அப்பொழுது, இன்சுலின் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
மருத்துவர், இன்சுலின் எழுதி கொடுத்து இ .எஸ். ஐ .பார்மசியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள ஊசி போடும் இடத்திற்கு கொண்டு சென்று இரண்டு பாட்டில் இன்சிலின் கொடுத்தார்கள். அதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார் .
இதை எப்படி பயன்படுத்துவது என த் தெரியாமல் இருந்த நிலையில், பழங்காநத்தம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்று சிரஞ்சியை தனியார் கடையில் வாங்கி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை வாயிலில் நின்று பாட்டிலை எடுத்து பார்த்தார். அப்போது, பிப்ரவரி மாதத்துடன்2022 காலாவதி தேதி போட்டு இருப்பதை கண்டு அதிர்ந்த அவர் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தால் உடனடியாக பழங்காநத்தம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், இதற்கு எனக்கு மாற்று மருந்து தேவைப்படுகிறது எனவும், இது காலாவதியாக தேதி இருப்பதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு ஒரு பாட்டில் வரை செல்லுபடியாகும் 2023 இன்சுலின் கொடுத்தார்கள். அரசு மருத்துவமனையிலேயே காலாவதியான இன்சுலின் கொடுத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகள் இதை செலுத்தி இருந்தால் அவருக்கு எந்த பக்க விளைவுகள் ஏற்படும் என தெரியவில்லை. எனினும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் அளவிற்கு இ.எஸ்.ஐ. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu