மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் மரணம்
வேலை செய்தபோது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, பராசக்தி நகர் செந்தமிழ் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் குமரன் ( 46)இவருக்கு ரூபா என்ற மனைவியும் கண்ணன் (வயது 16) என் மகனும் பூஜா ஸ்ரீ( 12) என்ற மகளும் உள்ளனர்.குமரன் ,மீனாட்சி நகரில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் தெருவில் உள்ள கட்டிடத்தில் எலெக்ரிக்கல் பிளம்பர் வேலை செய்வதற்காக மாடியில் வேலை செய்தார். அப்போது மாடியில் சுவர் இடிந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, அவனியாபுரம் போலீஸில் புகார் செய்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து குமரன் உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜாஜி மனைக்கு அனுப்பிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu