மதுரை மாநகராட்சி பள்ளியில் கல்வி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் தேர்வு

மதுரை மாநகராட்சி பள்ளியில் கல்வி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் தேர்வு
X

பள்ளிக்க்கல்வி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ்சேகர் வாழ்த்து தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்புரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்

பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர் உள்ளிட்டோருக்கு மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் வாழ்த்தினார்

மதுரை மாநகராட்சிபள்ளியில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிக்க்கல்வி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ்சேகர் வாழ்த்து தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்புரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலாத்துார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இன்று (23.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்எஸ். அனீஷ்சேகர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யும் பணிகளை பார்வையிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: குழந்தைகளின் வளர்ச்சியில் பள்ளி கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, குழந்தைகள் தொடக்க கல்வியில் பெறும் கல்வியறிவே அவர்கள் ஒட்டுமொத்த கல்வி கற்கும் அற்றலுக்கு அடித்தலமாக விளங்குகின்றது. இதனை கருத்தில் கொண்டு , தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகளின் முன்னேற்றத்

திற்காகவும், வளர்ச்சிக்காவும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009ன்படி பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்க உத்திரவிட்டுள்ளார்கள். இக்குழுக்களில், பெற்றோர், பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர், தலைமையாசிரியர், ஆசிரியர் பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கல்வி ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு பள்ளிகளில்பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் பெற்றோர்களின் பங்களிப்பு மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

மேலும், பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல் மற்றும் கல்வி இடைநிற்றலை தவிர்த்தல்,மதிய உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் கற்றல் கற்பித்தல் முறை பள்ளியின் தேவைகளைக் கண்டறிந்து பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் பள்ளிகளில் நிதி தொடர்பான வழிகாட்டுதல்,ஆண்டு நிதிநிலை அறிக்கை தயார் செய்தல் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பள்ளி மேலாண்மைகுழு பிரதிநிதிகள் பெற்றோர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

இந்நிகழ்ச்சியில் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் சரவண புவனேஷ்வரி ஆலாத்துார் ஊராட்சி மன்றத்தலைவர் சரண்யா ராஜவேல், மாணவர்களின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story