வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய கல்வி மிகவும் அவசியம்: மதுரை மேயர் பேச்சு
பைல் படம்
Free Cycle Distribution -மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி புரிய பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டித் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. ஏனெனில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வருவதால் அவர்களிடம் மிதிவண்டி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
முக்கியமாக இந்த இலவச மிதிவண்டித் திட்டம் பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அத்துடன் இந்த திட்டம் உயர்நிலைக் கல்வி படிக்கும் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இது மாணவர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் 11ம் வகுப்பு அனைத்து பயிலும் மாணவர்களுக்கும், ஐடிஐ மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
அதன்படி 2021-2022ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இளங்கோ மாநகராட்சி பள்ளி, ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காக்கைபாடினார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி;, அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி, கம்பர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளி, பொன்முடியார் மேல்நிலைப் பள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளி ஆகிய 11 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 2011 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் இதுவரை வழங்கப் பட்டுள்ளது.
இன்றைய தினம் பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 157 மாணவிகளுக்கும், திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 231 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 388 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்று , தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதனை, அனைத்து மாணவ, மாணவிகளும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய கல்வி மிக அவசியம் எனவே மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்க வேண்டும் என்றார் மேயர்.
இந்நிகழ்வில், துணை ஆணையாளர் முஜிபூர்ரகுமான், மண்டலத்தலைவர் சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் சுதன், போஸ், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu