மதுரையில் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி - எம்பி கனிமொழி

மதுரையில் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி - எம்பி கனிமொழி
X

பைல் படம்

சுவாமி சந்நிதி எதிரே உள்ள கொடிமரம் அருகே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.

கோயிலில் பரஸ்பரம் மரியாதை செலுத்திய அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி எம்.பி.:

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கனிமொழி - இரு தரப்பினரும் நேரில் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக இன்று காலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அப்போது, கோவிலுக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக, கோவிலுக்கு வந்தவரை வரவேற்ற முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து, இரண்டு நாள் ஆய்வு பணிக்காக எம்.பி. கனிமொழி தலைமையில் மதுரைக்கு வந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்தனர்.

அப்போது ,கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும், நாடாளுமன்ற நிலை குழு உறுப்பினர்கள் தரப்பினரும் சாமி சந்நிதி எதிரே உள்ள கொடிமரம் அருகே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவிலில் இருந்து விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். அதன் பின்னர் வந்த கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், கோவிலில் இருந்து புறப்பட்ட போது கோவிலுக்கு வெளியே இருந்த வளையல் கடை ஒன்றில் ஆய்வுக்கு உடன் வந்த, சக பெண் எம்பி ஆன கீதாபென் வஜேசிங்பாய் ரத்வாக்கு, வளையல்களையும், சாமி படத்தையும், தாழம்பூ குங்குமம் வாங்கி பரிசளித்தார்.

தொடர்ந்து, பொதுமக்கள் ஒருவரின் குழந்தைக்கு ஆதன் என்ற பெயர் சூட்டினார். தொடர்ந்து, கோவிலுக்கு வந்த இளம் பெண்கள் பலரும் கனிமொழியுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!