சிண்ட்ரோம் பாதிப்பை குணப்படுத்த தொடக்க நிலையிலேயே சிகிச்சை: மருத்துவர்கள் தகவல்

மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் நடந்த உலக சிண்ட்ரோம் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவர்கள்
சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகள் முழு திறனை எட்ட ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிக அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர்.
டவுண் சிண்ட்ரோம் பெடரேஷன் ஆஃப் இந்திய தலைவர் டாக்டர் சுரேகா ராமச்சந்திரன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மரம் மரபணுவியல் நிபுணர் டாக்டர் பிரதீப் குமார்,மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி,மருத்துவமனை நிர்வாக அதிகாரி டாக்டர் கண்ணன், குழந்தைகளுக்கான முழுமையான பராமரிப்பு மையத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் உமா முரளிதரன் ஆகியோர் இந்த நோய் குறித்து விளக்கமளித்து உரையாற்றும் போது,
டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளுக்கான முறையான பராமரிப்பு மையம் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த சிகிச்சை கிடைப்பதை ஏதுவாக வகையில் உள்ளது. குழந்தைகள் நல மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், சிகிச்சை வழங்குபவர்கள் , சமூகப் பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவில் மூளை நரம்பியல், எலும்பியல் மற்றும் கண்மருத்துவயியல், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவ துறை ஆகியவற்றிலும் இந்த அமைப்பின் கீழ் செயல்படுவதாக மையம் செயல்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu