மதுரை அருகே முருங்கை ஏற்றுமதியாளர்கள் கருத்து கேட்புக் கூட்டம்
கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்.
மதுரை வேளாண்மை கல்லுர்ரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆணையர், முருங்கை பயிரின் முக்கியத்துவம், அதன் பயன்பாடு மற்றும் முருங்கையை மதிப்புக் கூட்டுதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வெளிநாடுகளில் முருங்கைக்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், முதல்வர் 7 மாவட்டங்களை உள்ளடக்கி, மதுரையை மையமாக கொண்டு முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்தார். இதன் அடிப்படையில், சிப்காட், கோ.புதூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேளாண் வணிக மையமாக மாற்றப்பட உள்ளது என தெரிவித்தார். இந்த வளாகத்தில் முருங்கை தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் தேவைகளை கேட்டறிந்து, அதற்கு ஏற்றவாறு உருவாக உள்ளது என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டில் உள்ள முருங்கை தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட மதுரை, வேளாண்மைக் கல்லூரி முதல்வர் பால்பாண்டி, பெரியகுளம் கல்லூரி முதல்வர், ஆறுமுகம், நபார்டு துணை பொது மேலாளர் இன்கர்சல் மற்றும் ஆவாரம் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாச்சிமுத்து ஆகியோர் முருங்கை ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், இந்த வளாகத்தில் அமைக்கப்பட உள்ள வசதிகள் குறித்து தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் உதவி செயலாளர் சங்கரசுப்பிரமணியன், வேளாண்மை உதவி இயக்குநர் நிர்மலாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மதுரை விஜயலட்சுமி மற்றும் சிவக்குமார் ஒருங்கிணைத்தனர். இக்கூட்டத்தில், மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu