பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்: இறந்தும் கடமை தவறவில்லை

பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்:  இறந்தும் கடமை தவறவில்லை
X

பைல் படம்.

மதுரையில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, ஆரப்பாளையம் பஸ் நிலையத்திலிருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு கொடைக்கானல் கிளம்பியது அரசு பேருந்து. இந்த பேருந்து புறப்பட்ட ஐந்து நிமிடத்திலேயே, மதுரை குரு தியேட்டர் சிக்னல் அருகே செல்லும் போது, செக்கானூரணியை சேர்ந்த ஓட்டுனர் ஆறுமுகத்திற்கு (வயது 44) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். இருப்பினும் ஓட்டுநர் ஆறுமுகம் மாரடைப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!