மதுரை மாநகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர்

மதுரை மாநகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர்
X

மதுரை மாநகரில் திமுக வேட்பாளர் ராஜா என்ற பொன்வளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுரை மாநகரில் திமுக வேட்பாளர் ராஜா என்ற பொன்வளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுரை மாநகராட்சிக்கு திமுக சார்பில் போட்டியிடும், திமுக நிர்வாகியும், வேட்பாளருமான ராஜா என்ற பொன்வளவன், தாசில்தார் நகர் பள்ளிவாசல் தெரு தாழை வீதி, சித்தி விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது தமக்கு வாக்களித்தால், குடிநீர், சாலை வசதி, தெரு விளக்குகளை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், வைகை கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகளை செய்வேன் என்றும், பொதுமக்கள், என்னை எப்பவேண்டுமானாலும் மக்கள் பிரச்னைக்கு தொடர்பு கொள்ளலாம் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

திமுக கிளைக் கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், சிவா, சேது, மணி, கருப்பச்சாமி உள்ளிட்டோர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags

Next Story
why is ai important to the future