உசிலம்பட்டி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உசிலம்பட்டி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

உசிலம்பட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உசிலம்பட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் என மொத்தம் 322 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, உசிலம்பட்டி நகராட்சியில் 29 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சிக்கு உட்பட்டு 15,513 ஆண் வாக்காளர்கள், 16,298 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 31,611 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் வாக்குப் பதிவுக்காக 9 இடங்களில் 40 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையமாக, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, உசிலம்பட்டி நகராட்சிக்கான தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர், முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு நடிவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ம.சங்கரலிங்கம், உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) க.முத்து உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!