தமிழ் புத்தாண்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்
தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி அழகர் மலை மேல் உள்ள நூபுரகங்கையில் புனித நீராடிய பக்தர்கள்
தொடர்ந்து, கல்யாண சுந்தரவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள்,காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். 10,000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோயில் நிர்வாக அதிகாரி ராமசாமி மற்றும் ஆலய பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதைப் போல, மதுரை நகரில் மீனாட்சியம்மன், தெப்பக்குளம் மாரியம்மன்,மதுரை அண்ணாநகர் மேலமடை சௌபாக்ய விநாயகர், சர்வேஸ்வரன் கோயில், சித்தி விநாயகர் ஆலயம், தல்லாகுளம் பிரசன்ன வெங்கிடஜலபதி, பூங்கா முருகன் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமிகளை வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu