காெராேனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்: மதுரை மாவட்ட ஆட்சியர் பேட்டி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் பேசியபோது: மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை எனவும், 3-ஆம் அலை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
3-ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும், கொரோனா கண்காணிப்பு மையங்கள் தொடர்ந்து, செயல்பட்டு வருகிறது. 3-ஆம் அலையை எதிர்கொள்ள 150 ஐசியூ படுக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் 30 ஐசியூவுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில், உள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் 4 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களில் இரண்டு மையங்களில் பணிகள் முடிவுற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில், நாளொன்றுக்கு 8-டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவும், 80 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu