மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாநில தேர்தல் ஆணையர் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, உரிய நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முடிக்க வேண்டும்.
தேர்தல் அலுவலர்கள் கடமைகளை உரிய நேரத்தில் செய்து காலம் தாழ்த்தாமல், சிறப்பாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.. தத்துவமேதை அரிஸ்டாட்டில் கூற்றின்படி ஒரு நாடு என்பது நிலம், மக்கள், அரசு மற்றும் இறையாண்மை ஆகிய காரணிகளை சார்ந்ததாகும். மக்கள்தான் இந்த நான்கு காரணிகளை தீர்மானிப்பாளர்கள். மக்கள் தங்களது விருப்பப்படி தலைவரை தேர்ந்தெடுத்து அதன் மூலம் அவர்களுக்கான நன்மைகளை நிறைவேற்றி கொள்வதுதான் தேர்தல் ஆகும். ஜனநாயகத்தில் மக்கள் மூலமாகத்தான் அதிகாரம் வழங்கப்படுகிறது. தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் சட்டம் 2006 கையேட்டினை தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.
இந்த ஆய்வுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மதுரை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணி மேற்கொள்ள்ப்படுவதை பார்வையிட்டேன். இப்பணி நிறைவு பெற்றவுடன் பிற மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்படும்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில்தான், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. வருகின்ற 01.11.2021-அன்று வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை பெற்று காலத்தை அறிந்து உடனடியாக அலுவலர்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கையில் இறங்கி ஈடுபட வேண்டும். அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி மையம் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும். 26.01.2022-க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவினை மனதில் வைத்து செயல்பட வேண்டும். வேட்பாளர் கையேடு, வாக்குச்சாவடி கையேடு மற்றும் வாக்கு இயந்திர கையேடு ஆகிய கையேடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் .எஸ்.அனீஷ் சேகர், (மதுரை), ச.விசாகன், (திண்டுக்கல்) , .க.வீ.முரளிதரன், (தேனி), ப.மதுசூதன் ரெட்டி, (சிவகங்கை) மற்றும் .ஜெ.மேகநாதரெட்டி, (விருதுநகர்) , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் .வி.பாஸ்கரன், (மதுரை) , .வி.ஆர்.ஸ்ரீனிவாசன், (திண்டுக்கல்) மற்றும் திரு.பிரவின் உமேஷ் டோங்கரே, ., (தேனி) மற்றும் எம்.மனோகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் பா.கார்த்திகேயன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் .எஸ்.சிவசுப்பிரமணியம் , முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) .க.அருண்மணி , முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) கு.தனலெட்சுமி, உதவி ஆணையர் (தேர்தல்) .ஸ்ரீ.சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu