சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலய பூக்குழி திருவிழா
திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது .
நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில் தெளித்தனர்.பின்னர் பூ வளர்த்து அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை 6 மணியளவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
சோழவந்தான் முன்னாள் சேர்மன் எம்.கே.முருகேசன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா, சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன், ஒன்பதாவது வார்டு செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், செயல் அலுவலர் இளமதி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டை கிராமம் முதலியார்கோட்டை கிராமம் ரயில்வே பீடர் ரோடு, வழியாக மார்க்கெட் ரோடு, நான்குரதவீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான்போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu