குழந்தை வளர்ப்பு சவால் நிறைந்ததா..?

குழந்தை வளர்ப்பு சவால் நிறைந்ததா..?
குழந்தை வளர்ப்பு சவால் நிறைந்ததா? அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மதுரை.

குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை, பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். அளவுக்கு அதிகமாக கண்டிப்பதும், செல்லம் கொடுப்பதும் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேரம் செலவிடுவது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.

மதுரை முத்துப்பட்டியில் உள்ள சம்பக் மழலையர் தொடக்க பள்ளியில், பெற்றோர் பிள்ளைகளை வளர்ப்பதில் இருக்கும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பள்ளியின் தாளாளர் பாண்டியராஜன் மற்றும் தலைமை ஆசிரியை இந்திரா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில், சிறப்பு விருந்தினராக நியூமா அறக்கட்டளை லாரன்ஸ் பிரேம்குமார் மற்றும் ரெக்ஸ் யூத் ஆகியோர் கலந்து கொண்டு, தற்போதைய உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது.இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கக்கூடும். எனவே, குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளை, அவர்களே செய்யும் வகையில் ஊக்குவிக்க வேண்டும். படிப்பு விசயத்தில் அதிக அழுத்தம் தரக்கூடாது. தங்களுக்கு பிடித்தத்தைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். நற்பண்புகள் குழந்தைகளை சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்களாக உருவாக்கும். உடல் அளவிலும், மனதளவிலும் வளர்ச்சி பெற செய்வதற்கு, குழந்தைகளை அதிக நேரம் விளையாட்டில் ஈடுபடுத்துங்கள். உணவு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

பெற்றோர்கள் அவர்களின் சொந்த அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கான அணுகுமுறையை அவர்களின் பெற்றோர்களே முடிவு செய்ய முடியும். குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் யோசனைகளை மதிக்க வேண்டும்'' என்று கூறினர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவினை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்சியினால், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்உள்ள நல்ல உறவினை காண முடிந்தது.

நிகழ்ச்சியினை, மதுரை அமெரிக்கன் கல்லூரி சமூக பணித்துறையின் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் அபராஜிதா, ஜோ இன்பேன்ட் ஜேக்கப், பத்மாசினி, கங்காதரன், வசந்த், பிரிஸ்சில்லா, அபிஷேக் ஜோன் சிங், பிரதீப் கண்ணன், யோகலெட்சுமி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags

Next Story