ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
X
ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராடிய ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு, உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராடிய ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலையின் துணைத் தலைவர் சுமதி உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு, நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், வழக்கு குறித்து சிப்காட் மற்றும் புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!