மாநகராட்சி தேர்தல்: மதுரையில் தேமுதிக சார்பில் வேட்பாளர் நேர்காணல்

மாநகராட்சி தேர்தல்: மதுரையில் தேமுதிக சார்பில்  வேட்பாளர்  நேர்காணல்
X

 மதுரை டி.ஆர்.ஒ. காலனியில் உள்ள மாவட்ட தேமுதிக  தலைமை கழக அலுவலகத்தில் இன்று மாநகராட்சி தேர்தலுக்கான நேர்காணல் நடைபெற்றது.

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட 39 மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு மீது நேர்காணல் நடந்தது

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மதுரையில் நேர்காணல் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட 39 மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்கள் அளித்திருந்த தேமுதிக நிர்வாகிகளுக்கான நேர்காணல், மதுரை டி.ஆர்.ஒ. காலனியில் உள்ள மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் இன்று (26/01/2022) நடைபெற்றது.

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கழக அவைத் தலைவர் ஜி. பாண்டியராஜ், மாவட்டகழக துணை செயலாளர்கள் பா.மானகிரியார், கே. இராமு, ஆர். இளமிநாச்சியம்மாள், செயற்குழு உறுப்பினர் கே.சேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.முருகன், எம்.சின்னச்சாமி, இன்சூரன்ஸ் ராஜா, அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் மேலமடை ஜி.ஐயப்பன், தெப்பக்குளம் பகுதி கழக செயலாளர் எம். கோல்டுமுருகன்.

மஹால் பகுதி கழக செயலாளர் ரமேஷ்பாபு, கலெக்டர் ஆபீஸ் முனிச்சாலை பகுதி கழக செயலாளர் கோவிந்தராஜ், செல்லூர் பகுதி கழக செயலாளர் தெய்வேந்திரன், கேப்டன் மன்றம் சுரேஷ், இளைஞரணி செயலாளர் இளங்கோ, இளைஞரணி துணை செயலாளர் தல்லாகுளம் ராஜா, தொண்டரணி செயலாளர் வீரா, வட்டகழக செயலாளர்கள் சின்னையன், கண்ணன், சசிகுமார் சுப்பிரமணி, பாலாஜி, ஆறுமுகம், மெடிக்கல் முரளி, சின்னச்சாமி, அன்னகாமு, பகுதி துணை செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி