அழகர் கோயிலில் தை பௌர்ணமி நாளில் தெப்பத் திருவிழா

அழகர் கோயிலில் தை பௌர்ணமி நாளில் தெப்பத் திருவிழா
X

அழகர்கோவிலுக்கு சொந்தமான  பொய்கைகரைபட்டி உள்ள தெப்பக்குளம் .

இங்கு தை மாதம் பௌர்ணமி அன்று சாமி புறப்பாடாகி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்

தை மாத பௌர்ணமி நாளில் மதுரை அழகர்கோயில் தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

மதுரை அருகே உள்ளது அழகர் கோயில் ஆழ்வார்களால் பாடல்பெற்ற புகழ் பெற்ற தலமாகும். திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் முக்கியமான திருவிழாக்களில், ஒன்று சாமி புறப்பாடாகி தெப்பத்தில் வலம் வருவது.அழகர்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் பொய்கைகரைபட்டி உள்ளது .

இங்கு தை மாதம் பௌர்ணமி அன்று சாமி புறப்பாடாகி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுவாமி வெளிப் பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது. தெப்பத்தில் தண்ணீர் இல்லாமல் இருந்ததால், இந்த ஆண்டு நல்ல மழை பெய்தால்,தெப்பகுளம் நிரம்பி வழிகிற காரணத்தினால், இந்த ஆண்டு சுவாமி கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி காட்சி கொடுப்பார் என பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil