மதுரையில் பா.ஜ.க., இந்து அமைப்புகள் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சி,இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், அகில இந்திய மாணவர் அமைப்பு, பிம்எஸ் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக லாவண்யாவுக்கு நீதி வேண்டி பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேதாஜி சிலை வரை பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் பா.சரவணன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இதில், பாஜக நிர்வாகிகள் பெருந்திரளாக ஊர்வலமாக வந்தனர். மேலும், நேதாஜி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு அமைப்பு தலைவர்கள் விசுவ இந்து பரிஷத் கே.எம்.பாண்டியன், பாஜக மாநில செயற்குழு சசிராமன், பாஜக மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கதலிநரசிங்க பெருமாள், மாநகர் புறநகர் மாவட்ட தலைவர்கள் மருத்துவர் பா.சரவணன், மகாசுசிந்திரன், பிஎம்ஸ் பொறுப்பாளர் தங்கராஜ் அவர்கள் கண்டன சிறப்புரை யாற்றினர்.
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் பரமசிவம், ஆலய பாதுகாப்பு சுந்தரவடிவேல், பல்வேறு இந்து அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu