மதுரை அழகர்கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி : பங்கேற்று அசத்திய மாணவிகள்..!

மதுரை அழகர்கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி : பங்கேற்று அசத்திய மாணவிகள்..!

மதுரை அழகர் கோயிலில் பரதம் ஆடிய மாணவிகள் 

அழகர் கோவிலில், நடந்த பரதநாட்டிய கலைவிழாவில் மாணவிகள் பங்கேற்று ஆடிய பரதநாட்டிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அலங்காநல்லூர்:

பிரசித்தி பெற்ற கோவில்களில் மதுரை - அழகர் மலையில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இக்கோவிலின் இராஜகோபுரம் முன்பாக - நூபுர கங்கை சாலையில் கலைகளில் சிறந்த பாரம்பரியமிக்க பரத நாட்டிய கலையை திடப்படுத்தும் வகையில், உலக சாதனைக்காகவும்,நேற்று காலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதில் ,தமிழ்நாடு அளவில் 15 பள்ளிகளை சேர்ந்த 3 வயது முதல் 15 வயதுடைய சிறுமிகள் முருகன் வேடமணிந்து, அலங்கார ஆடைகளிணிந்து, கோபுரம் முன்பாக பாரத நாட்டியம் ஆடினர். சுமார் 15 நிமிடங்கள் ஒரே இடத்தில் 300 சிறுமிகள் பாரத நாட்டியம் ஆடி, பழமுதிர் சோலைமுருகன் பற்றிய பாட்டு களுக்கு ஏற்றார் போல், வலைந்து வலைந்து ஆடி பார்வையாளர்களின் கை தட்டலை பெற்றனர்.


மேலும், பங்கேற்ற 300 சிறுமிகளுக்கு கேடயமும், சான்றிதழும், அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் நடந்த பாராட்டுதலுக்கு பிறகு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன், ஆகியோர் ஆலோசனையின் பேரில், நடந்தது. பரிசளிப்பு விழாவில் அறங்காவலர்கள் செந்தில்குமார், மீனாட்சி பிரியாந்த், குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, மற்றும் திருக்கோவில் பணியாளர், நோபல் உலக சாதனை நிறுவன ஒருங்கிணைப்பாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story