அரசு சிட்டி பஸ்களாக செயல்படும் ஷேர் ஆட்டோக்கள் : ஆர்.டி.ஒ. கவனிப்பாரா?

அரசு சிட்டி பஸ்களாக செயல்படும் ஷேர் ஆட்டோக்கள் : ஆர்.டி.ஒ. கவனிப்பாரா?
X
மதுரை நகரில் ஆட்டோக்கள் சிட்டி பஸ்களாக செயல்பட்டு வருகின்றன. அவைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஆர்டிஓ நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை:

மதுரை மாவட்டத்தில், ஆட்டோக்கள் சிட்டி பஸ்களாக செயல்படுவதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசாருக்கு தெரிந்தே, ஆட்டோக்கள் அதிகளவில் அரசு விதியை மீறி இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குறை சொல்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், அலங்காநல்லூர், அழகர் கோவில்,ஊர்மெச்சி குளம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், குருவித்துறை, சோழவந்தான், காடுபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆட்டோக்கள் அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ,அரசு சிட்டி பஸ்கள் போக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக, மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மதுரை போலீஸ் போக்குவரத்து துணை ஆணையர், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும்,அரசு பெர்மிட் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த போலீஸார்கள் ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது.

மதுரை அண்ணா பஸ் நிலையத்தில், ஆட்டோக்கள் அரசு பஸ்ஸில் பயணிகள் , பயணம் செய்யாதபடி, பஸ் நிறுத்தங்களில் சாலையிலே குறுக்கே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றது. இதை அப்பகுதியில் உள்ள போக்குவரத்து போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மதுரை ,வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்து அரசு பெர்மிட்டின்றி இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை நகரில் அண்ணா நகர், அண்ணா நிலையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், கோரிப்பாளையம்,புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இடையூறாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டுமென, பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை பெரியார் நிலையத்திலிருந்து, மாட்டுத்தாவணி, வண்டியூர், அண்ணாநகர், வரிச்சூர், பூவந்தி செல்கின்ற அரசு சிட்டி பஸ்களும், மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, அண்ணா நிலையம் உள்ளே வந்து செல்ல வேண்டும் எனவும், அண்ணா பஸ்நிலையம் வெளியே, சிட்டி பஸ்களை இயக்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளுக்கு ஆட்டோக்கள் தொல்லையாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.

மதுரை காவல் ஆணையர், தனி கவனம் செலுத்தி, மதுரை அண்ணா நிலையம் உள்ளே பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எண்டு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil