மதுரையில் காமெடி நடிகரை தாக்கியதாக 6 பேர் கைது
பேஸ்புக்கில் , பாஜக மற்றும் பிரதமர் குறித்து பதிவிட்ட திமுக ஆதரவளரான காமெடி நடிகரின் கால்களை உடைத்த நடிகரின் மனைவி, பாஜகவினர் உட்பட 6பேரை போலீஸார் கைது செய்தனர்.
கருப்பசாமி, குத்தகைதாரர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள காமெடி நடிகரும், (சன்டிவி, விஜய்டிவி )தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில், போட்டியாளராகவும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை நடத்தியவர் வெங்கடேசன்.
இவர், மதுரை தபால்தந்திநகர் 3ஆவது தெரு பகுதியில் சொந்த வீட்டில் தனது காதல் மனைவியான பானுமதியுடனும் , ஒரு பெண் குழந்தையுடனும் வசித்துவந்துள்ளார்.இந்நிலையில், காமெடி நடிகர் வெங்கடேசன் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அப்டேடாக இருந்துவந்துள்ளார்.
இதனிடையே, வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்துவந்துள்ளது.இதனிடையே, அவ்வப்போது கணவன் மனைவி யிடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுவந்துள்ளது. காதலித்து திருமணம் செய்து தனது கணவர் விவகாரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், தனது கணவர் வெங்கடேசன் சமூகவலைதளங்களில் பெண்களோடு நட்பாக பழகி வந்ததால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பானுமதி கணவரை தாக்கி அவரது கால்களை உடைத்து வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு முடக்கி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து வெங்கடேசனின் ஓட்டுனரின் மூலமாக ராஜ்குமார் என்பவர் மூலமாக 1லட்சம் ரூபாய் கொடுத்து வெங்கடேசனின் கால்களை உடைக்க திட்டமிட்ட நிலையில், திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதனால் மற்றொரு திட்டம் தீட்டிய பானுமதி தனது உறவினரான பாஜக நிர்வாகியான கோசாகுளம் பகுதியை சேர்ந்த பாஜக பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்துவிடம் பிரச்னையை கூறியுள்ளார்.
இதனையடுத்து பானுமதிக்கு உதவுவதாக கூறிய வைரமுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரை சந்தித்து காமெடி நடிகர் வெங்கடேசன் திமுக ஆதரவாளராக இருப்பதாகவும், இவர் தனது சமூகவலைதள பக்கங்களில் பாஜக குறித்தும், பிரதமர், அமித்ஷா, அண்ணாமலை குறித்தும் அவர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவிட்டுவருகிறார் எனவே அவரை மிரட்டி அவரது கால்களை உடைப்போம் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காமெடி நடிகர் வெங்கடேசன் தபால் தந்திநகர் காரில் வந்தபோது காரை வழிமறுத்து ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டிய பின்னர் வெங்கடேசனை நாராயணபுரம் பகுதிக்கு கடத்திசென்று பாஜக குறித்து கருத்துகளை பதிவிடுவயா என கூறியபடி கடுமையாக தாக்கி கால்கள் இரண்டையும் உடைத்துள்ளனர்.
இதில் காயமடைந்த வெங்கடேசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து, வெங்கடேசின் கார் ஓட்டுனரான மோகன் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழுது புரண்டபடி நடித்து புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, காமெடி நடிகர் வெங்கடேசனின் மனைவி பானுமதி தூண்டுதலின் பெயரில் , வெங்கடேசனின் ஓட்டுனர் மோகனின் உதவியோடு வெங்கடேசனை தாக்கியதும் தெரியவந்துள்ளது.இதேபோன்று தனது உறவுப்பெண்ணுக்கான குடும்ப பிரச்னைக்காக பாஜக நிர்வாகி பாஜகவினரை அடியாட்களாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காமெடி நடிகரான தனது கணவரை சதி திட்டம் தீட்டிய வெங்கடேசனின் மனைவியான பானுமதி , வெங்கடேசனின் கார் ஓட்டுனரான மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த மோகன் என்ற பென்ஸ் மோகன், மதுரை புதூர் கற்பகம் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகளான மதுரை கோசாகுளம் பகுதியை சேர்ந்த பாஜக பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து, செல்லூர் பகுதியை சேர்ந்த பாஜக 28 ஆவது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவர் மலைச்சாமி , மதுரை மேலபனங்காடி பாஜக கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ் ஆகிய 6பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் ,மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரையில் காமெடி நடிகரின் குடும்ப பிரச்சனையால் காதல் மனைவியே கணவரின் காலை உடைக்க கணவரின் ஓட்டுனருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியதோடு, பிரச்சனையை திசை திருப்ப பாஜக - திமுக மோதல் போல நாடகம் நடத்தப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu