அழகர்கோவில் கோயில் துணை ஆணையாளருக்கு, பணி நிறைவு பாராட்டு விழா!

அழகர் கோயில் துணை ஆணையாளருக்கு, பணி நிறைவு பாராட்டு விழா.
பணி நிறைவு பாராட்டு விழா:
அலங்காநல்லூர், பிப்.1-
மதுரை மாவட்டம் , அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் துணை ஆணையாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார் மு.ராமசாமி. இவருக்கு, நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றதற்காக இக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் , பணி நிறைவிற்காக பாராட்டு விழா நடந்தது.
இதற்கு அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் சுரேஷ், கூடலழகர் பெருமாள் கோவில் உதவி ஆணையர் செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் பிரதீபா வரவேற்றார்.
விழாவில், பேரூராட்சித் தலைவர் குமரன், அ.வலையபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தீபா தங்கம், ஒன்றியக் கவுன்சிலர் மலைச்சாமி, மற்றும் பல்வேறு கோவில் அதிகாரிகள், தல்லாகுளம் கோவில் பேஷ்கார் புகழேந்தி, முருகன் கோவில் மேலாளர் தேவராஜ், தலைமை ஆசிரியர் செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினைவு பரிசுகளை வழங்கி, கைத்தறி ஆடைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
33 ஆண்டுகள் அறநிலைய துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற துணை ஆணையர் ராமசாமி ஏற்புரையாற்றினார். முடிவில், கண்காணிப்பாளர் அருள் செல்வம் நன்றி கூறினார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu