அண்ணா நினைவு தினம் : வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் மரியாதை
வாடிப்பட்டியில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுகவினர்
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, வாடிப்பட்டியில் உள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பிஉதயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளையொட்டி, வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். பி.உதயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.
வாடிப்பட்டி. யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் கொரியர் கணேசன் முருகேசன், ராஜா துரை .தன்ராஜ் நிர்வாகிகள் விவசாய பிரிவு ஒன்றியச்செயலாளர் வாவிடமருதூர் குமார் ,கா மணிமாறன், கோட்டைமேடு பாலா, வாவிடமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருநாவுக்கரசு உட்படமற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu